ஒரே ஒரு முறை தான் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது, வீழ்ந்த தமிழினத்தைத் தூக்கிவிடவேண்டும் என்கின்ற ஒரு போராளியின் குணமும், நல்ல தெளிந்த சிந்தனையும், வெற்று பேச்சு இல்லாமல் சொல்லியவற்றைச் செயல்படுத்தவும் முடிந்தவர் தான் வா.கடல்தீபன்.
துரோக கருமேகம் சூழ்ந்து திக்குத் தெரியாமல் திசை தெரியாமல் தமிழினம் தவித்த போது ஆயிரமாயிரம் தமிழர்கள் விழித்தெழுந்தார்கள் அதில் மிக முக்கியமானவர் வா.கடல்தீபன்.
வெற்று சொல் இல்லை செயல்மட்டுமே மாற்றத்தைக் கொடுக்கும் என்று களமாடிய வா.கடல்தீபன் தமிழ்த்தேசிய எழுச்சியின் ஒரு வடிவம். வீரவணக்கம் வா.கடல்தீபன்!
#salute_to_kadaldeepan