நிலா சிதறும் வழியில்,
அமைதியே அச்சப்படும்
நடுநிசி வேளையில்…
ஒளி வீசும்
நிலவுக்கோ!
அந்த ஒளியை
உள்வாங்கி,
சிதறடிக்கும்
மேகத்துக்கோ!
உண்மை தெரியாது…
அந்த இரவுப் படகின்
வழிகாட்டி தாங்களே என்று.
நீங்களும்
முகமறியாத பலருக்கு
வழிகாட்டித் தான்!
-தமிழன்சங்கர்