“கொரோனவைக் கட்டுப்படுத்திய டாசுமாக்” என்னடா மருந்துக்கடையா டாசுமாக்கை மாற்றப் போகிறார்களா என்று எண்ணுகிறீர்களா, அது தான் இல்லை மே 7 அன்று டாஸ்மாக் மறுதிறப்பு விழா…
கொரோனா உயிர் கொல்லியை உற்பத்திச் செய்து உயிரிப் போர் நடந்து கொண்டிருக்கிறது, அதை வைத்து உலகமே ஒவ்வாத அதிநவீன எந்திர வாழ்க்கைக்குச் சாமானிய மக்களைத் தள்ளிக் கொண்டிருக்கிறது ஒற்றைக் குடியாட்சி.
தமிழ்நாடு போன்ற கலாசாரச் சீரழிவுகள் திட்டமிட்டு நடத்தப்படும் இடங்களில் ஊரடங்கு என்று டாசுமாக்கை மூடினார்கள். இனி டாசுமாக்கைத் திரும்பத் திறக்கக் கூடாது என்கின்ற நோக்கத்தில் சமூக ஊடக நண்பர்கள் சில தினங்களுக்கு முன் சமூக ஊடகங்களில் பிரச்சாரங்களை ஆரம்பித்தார்கள், எப்போதும் செவிடாக இருக்கும் அரசாங்கம் துரிதமாக விழித்துக் கொண்டு உடனடியாக டாசுமாக்கைத் திறக்கிறது.
என்னங்க சார் உங்க சட்டம் ?
எந்தத் தொழில்த்துறைக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் சாராய விற்பனைக்கு இவ்வளவு ஆர்வம் காட்டும் அரசாங்கங்களுக்கு ஒரு கேள்வி… என்ன ஆச்சு உங்க எசமானார் உலகச் சுகாதார அமைப்பு(WHO) போட்டக் கட்டளை… கொரோனாக் கதை முடிந்து விட்டதா…
ஒட்டுமொத்த உலக மக்களையும் எளிதாக உயிர் பயத்தைக் காட்டிக் கட்டுப்படுத்த முடியும் என்பது பயத்திற்கே பயம் காட்டுவது போல் இருக்கிறது.
சாராய வியாபாரி, மருத்துவ வியாபாரி, உணவு வியாபாரி இவனுங்கப் போடும் கட்டளைக்கு மக்களைப் பாடாய்ப் படுத்தும் முட்டாள் அரசியல் தலைவர்கள்… இப்படித்தான் கொரானாவை டாஸ்மாக் கட்டுப்படுத்தியது… இதில் விந்தை ஏதும் இல்லை.
மக்கள் இனி குறைந்த பட்சச் சுதந்திரத்தை “உண்மையான சுதந்திரம்” என்று ரசிக்க, இறைஞ்சி நிற்கப் போகிறார்கள்.
மரணப் பயத்தக் காட்டிட்டாங்கப் பரமா… போகப் போகப் பழகிடும் மக்களே!!!