0

கவிதாயினிகளுக்கு வாழ்த்துக்கள்!!!

சங்கத்தமிழ் விளையாடும் சிந்தனைக் கூடமாக அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கதை மாற்றிய பெண் புலவர்களுக்கு, கவிதாயினிகளுக்கு வாழ்த்துக்கள்!!!

பகிரிகளில்
சில நேரம்
கவிதைகள்
பரிமாறப்படும்!
ஆற அமர
படிப்பேன்,
அழகிய இசையாய்
தமிழ்
அவர்களின்
பேனாக்களில்
ரீங்காரமிடுமோ!
தவறு…
கணிப்பொறி
காலத்தில்
நான்
பேனா என்கிறானே!
விசைப்பலகையில்
மீட்டிய
தமிழ்க்
கவிதைகள்
பைனரிகளில்(Binary)
இயந்திரத்தோடு
கொஞ்சிக்
குலாவி
இணையத்தில்
உலவிய
நேரம் போக
தமிழர்
இதயங்களில்
உலவ வரும்
ஆவேசம் ஒரு கவிதை
மயில் இறகு ஒரு கவிதை
மெல்லிய இசை ஒரு கவிதை
கவித்துவம் ஒரு கவிதை
கண்ணீர் வரும் ஒரு கவிதை
துள்ளல் இசை ஒரு கவிதை
கவிதைக்கு
பஞ்சம் இல்லை
கவியரங்கம் தான் பஞ்சமிங்கே!
வாழ்த்துக்கள் தோழிகளே…
தமிழ் உள்ள நாள் வரை
தமிழர் உள்ள நாள் வரை
உங்கள்
கவிதைகள்
தமிழ்த்தோட்டப் பூக்களாய்
பூத்துக்
குலுங்கட்டும்…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!