0

மதன்,ராசவேல்,மாரிதாசு,கருப்பர் கூட்டம் வேற யாருப்பா!

தமிழர்கள் தம் நிலை உணரவில்லை என்றால் வீணாகத் தமிழருக்கு உதவாத ஆட்சியில் சிக்கி துயரப்படும் நிலை தொடரும். திராவிடமும் இந்துத்துவமும் மேல்மட்டத்தில் கள்ள உறவை வைத்துக் கொண்டு இடை மட்டத்திலும், கடை மட்டத்திலும் கடுமையாக மோதிக் கொள்வது போல் ஒரு மாயையை நம் வரலாற்று நெடுக செய்து கொண்டிருக்கிறது. இன்று நடக்கும் வளையொலி மோதல்களும், ஊடக பஞ்சாயத்துக்களும் அதைத் தான் நிரூபிக்கின்றன.

தமிழர்களின் இயற்கை வளங்கள் ஒரு பக்கம் கொள்ளையடிக்கப் பட்டுக்கொண்டு இருக்கிறது, தமிழர்கள் மீது வன்மமாகத் தமிழ்நாட்டு காவல்துறையே நடக்கும் செயல்களை ஜெயராசு,பீனிக்சு என்று ஒரே குடும்பத்தில் தந்தை மகன் படுகொலையையும், சுடெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியான 13 தமிழர்களின் படுகொலையும் அதை உறுதிப்படுத்துகின்றன. தமிழர் நிலமும்,மக்களும் அவர்கள் வாழ்வியலும் திராவிட இந்துத்துவச் சச்சரவுகளில் முக்கியத்துவம் கொடுத்துக் கவனிக்கப்படாமல் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழின மூத்தோனை, இதுவரை சுப்பிரமணியன் என்று சொல்லிக் கொண்டிருந்த இந்துத்துவவாதிகள் முருகன் என்று தமிழர் மெய்யியலில் நுழைய முயற்சிக்கிறான். கருப்பர் கூட்டம் வலையொளியை நடத்திக் கொண்டிருக்கும் திராவிடன் கந்தர் சசுடி கவசத்தைப் பாலியல் ஆபாசத்தின் உச்சம் என்று முருக வழிபாட்டைச் சகட்டுமேனிக்குச் சாடுகிறான். வைரமுத்து ஆண்டாள் பிரச்சனை போல் அடுத்தப் பிரச்சனைக்கு இந்தத் திராவிட ஆரிய கூட்டுக் களவாணிகள் தமிழர்களைத் தயார்படுத்துகின்றனர்.

இவர்கள் போடும் போலி சண்டையில் தமிழர்கள் யார் பக்கம் சாய்ந்தாலும் அந்த முருகனே வந்தாலும் தமிழர்களைக் காப்பாற்ற முடியாது.

திராவிட, இந்துத்துவ,முதலாளித்துவச் சித்தாந்தம் பேசும் தமிழர்களை நாம் மாற்ற முடியாது. அரசியலே வேண்டாம் என்று நடக்கும் நிகழ்வுகளுக்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அப்பாவியாய் இருக்கும் தமிழர்களே… விழியுங்கள்!

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!