0

காவி திருவள்ளுவர், நேபாள ராமர், கந்தர் சசுடி கவசம்!

மதன் ஒரு சங்கீயா என்று தமிழர்கள் சூடு பறக்க விவாதம் நடத்திக் கொண்டிருக்கும் போது சங்கீகளின் தலைமை ஆலோசகர் குருமூர்த்தி மதனுக்கு நற்சான்றிதலை கீச்சில் பதிவிட்டு சங்கீகளின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார். சங்கீகளுக்கும் திராவிட அமைப்புகளுக்கும் நடக்கும் நாடக உரசல்களைத் தூசியைத் தட்டுவது போல் தமிழர்கள் தட்டி செல்லவேண்டும், இதனிடையே இந்துத்துவவாதிகள் வயிற்றில் புளியை கரைக்கும் செய்தி இமயமலைச் சாரலில் இருந்து வந்திருக்கிறது.

நேபாள கவிஞர் பனுபக்தாவின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்ட நேபாளத்தின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி அவர்கள் “ராமர் பிறந்த உண்மையான அயோத்தி எங்கள் நாட்டில்தான் உள்ளது. இந்தியாவில் உள்ள அயோத்தியாவில் வேண்டுமானால் சர்ச்சை இருக்கலாம். நம் அயோத்தியாவில் இல்லை,” என அவர் கூறி உள்ளார்.

நேபாள பிரதமரின் கருத்துக்கு அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “ராமர் மற்றும் அவரின் பிறப்பிடம் தொடர்பாகப் பல்வேறு கதைகள் உள்ளன எனவே, ராமர், ராமாயணம் மற்றும் அதனோடு தொடர்புடைய இடங்களின் வரலாறு குறித்துத் தெரிந்து கொள்ள ராமாயணத்தில் வரும் மிகப்பெரிய கலாசாரப் புவியியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகளின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் பிரதமர் அவ்வாறு கூறினார்.

ராமர் மற்றும் சீதையின் திருமணத்தைக் கொண்டாடும் விவாகப் பஞ்சமி திருவிழாவின்போது, இந்தியாவின் அயோத்தியிலிருந்து நேபாளத்தின் சனக்பூர் வரை திருமண ஊர்வலம் நடைபெறும். மேலும் 2018ஆம் ஆண்டுச் சனக்பூரிலிருந்து அயோத்திக்கு பேருந்தும் விடப்பட்டது. இந்த நிகழ்வு இரு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள கலாசாரப் பந்தத்தைக் குறிப்பதாக உள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் குறிப்பாகக் கீழடியில் சங்கீகளும் திராவிடர்களும் ஆடும் ஆட்டத்திற்கு இணையாக இமயமலை நாடான நேபாளம் சங்கீகளுக்கு எதிர்காலத்தில் பல அனர்த்தங்களைக் கொண்டுவரப்போகும் ஆப்பை சொருகி இருக்கிறது. திருவள்ளுவருக்குக் காவி நிறம் பூசியது,தமிழர் மெய்யியலை இந்து என்கின்ற மத நிறுவனத்திற்கு அடிமைப்படுத்தியது என்று தமிழரை வஞ்சித்த இந்துத்துவாதிகளுக்கு ஒரு காலத்தில் இந்து நாடான நேபாளம் சரியான நெருக்கடியை கொடுத்துள்ளது.
கருப்பர் கூட்டத்தை எதிர்க்க தமிழர் முருகனை சுப்பிரமணி என்று அழைக்கும் சங்கீ பின்னாடி செல்லாதீர்கள் தமிழர்களே!

மதன் திராவிட ஊடக எதிர்ப்பு மற்றும் நேபாளத்தின் ராமர் பிரச்சனை போன்ற திராவிடச் சங்கீகளின் பிரச்னையை வேடிக்கை பார்த்துக் கொண்டே, தமிழர்கள் நாம் நம் வேலையில் கவனம் செலுத்துவோம்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!