அரசியல் பாலபாடத்தில் இன்று நாம் தமிழர் பெரிதாகச் சறுக்கியுள்ளது. இனி திராவிடத்தின் அடி பெரிதாய் இருக்கும் தமிழ்த்தேசிய கருத்தியலையே அசைத்து பார்க்கும் வல்லமை வந்து விட்டதாகத் திராவிடம் எண்ணும் அளவிற்குத் தற்போது கட்சியில் இருந்து கல்யாணசுந்தரம் மற்றும் ராஜீவ்காந்தி வெளியேற்றபட்ட நிகழ்வை பார்க்கிறது. திராவிட ஊடகங்கள் சுறுசுறுப்பு அடைந்திருக்கின்றன சவுக்குச் சங்கர் பேட்டியையும் சுந்தரவள்ளி பேட்டியையும் பார்க்கும் நாம் தமிழர் கட்சி தம்பி தங்கைகள் உணர்வார்கள்.
சீமானா! கல்யாணசுந்தரமா!
நீங்கள் சீமானா கல்யாணசுந்தரமா என்று விவாதித்துக் கொண்டிருக்கும் நொடிகளில் திராவிடம் அதன் வலையை மிக வேகமாக விரித்துக் கொண்டிருக்கிறது. உங்கள் விவாதம் தொடர தொடர திராவிடத்திற்கு மறைமுகமாக நீங்கள் உதவிக்குக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீயா நானா கோபிநாத் தமிழ்நாடு உயர்வு நிலையில் இருப்பதாகவும் அதற்குக் காரணமே கருணாநிதியும் எம்.ஜி.யாரும் என்று சுரேசு சம்பத்தை வைத்து பரப்புரை செய்யும் விதம் ஒரு காணொளியை சமூக ஊடகங்களில் பரப்பிக்கொண்டிருக்கின்றனர், நாமோ சீமானா இல்லை கல்யாணசுந்தரமா என்று விவாதித் கொண்டிருக்கிறோம்.
சீமான் பக்கமா இல்லை கல்யாணசுந்தரம் பக்கமா?
தமிழ்த்தேசிய கருத்தியலை அசைத்து பார்க்க திராவிடம் முயலும் போது நாம் தமிழர் அதை முழுபலத்துடன் அடிக்கவேண்டும், தமிழ்த்தேசிய கருத்தியலின் பின்னடைவு நாம் தமிழர் கட்சியைப் பின்னுக்குத் தள்ளிவிடும், தற்சமயம் நீங்கள் விவாதித்துக் கொண்டிருக்கும் யார் பக்கம் நீங்கள் சீமான் பக்கமா இல்லை கல்யாணசுந்தரம் பக்கமா என்பது, கல்யாணசுந்தரம் செய்த துரோக பட்டியலுக்கு ஆதாரம் உள்ளதா போன்ற விவாதங்கள் எந்த விதத்திலும் வரும் தேர்தலுக்குப் பயன்படப்போவதில்லை.”இரண்டு தட்டு தட்டியதற்கே உடைந்து விட்டது நாம் தமிழர்” என்று ஆணவமாகச் சுந்தரவள்ளி பேட்டி கொடுத்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியினர் சொந்த கட்சிக்காரர்கள் போடும் காணொளிகளைப் பார்க்கும் அதே நேரம் மாற்றுக் கட்சியினர் போடும் காணொளிகளைப் பாருங்கள் அப்போது தான் யதார்த்த அரசியல் புரிய வரும்.
ஏதோ சொல்லவேண்டும் என்று தோன்றியது, தமிழ்த்தேசியர்களும், நாம் தமிழர் கட்சியினரும் தேர்தல் சமயத்தில் திராவிடம் கொடுத்திருக்கும் நெருக்கடியை உணருங்கள். சவுக்கு சங்கர் மற்றும் சுந்தரவள்ளியின் காணொளியை பாருங்கள் என்ன நடக்கிறது என்று புரியும், தெளிவைடையுங்கள்.
மீண்டும் சந்திப்போம்…