0

Think before touching Paari Saalan | பாரிசாலன் கேட்க ஆளில்லையா ? | @TamilanSankar.com

தமிழர்கள் நாம் அடி மேல் அடி வாங்கினாலும் ஒன்றை மட்டும் விட மறுக்கிறோம் அஃது எதுவென்றால் மனிதநேயம் அந்த மனிதநேயம் என்கின்ற துருப்பு சீட்டு நமது எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் வசதியாகப் போய்விட்டது. தமிழர் நிலத்தில் உட்கார்ந்து கொண்டு தமிழனை வந்தேறி என்பது ஈழத்தில் இனப்படுகொலை செய்யாதது போல் செய்துவிடுவோம் என்று பேசுவது அதை எதையும் சட்டை செய்யாமல் ஒரு தமிழர் கூட்டம் திமுகாவிலும் ஒரு தமிழர் கூட்டம் இந்துத்துவா ஆதிக்கத்தில் இருக்கும் அதிமுகாவிலும் ஒரு தமிழர் கூட்டம் கமல் ரசினி என்று பிரிந்து கொண்டு அமைதியாய்ப் போவது தமிழரின் நிலையினை இறுக்கமாக்குகிறது.

தமிழர்கள் உரிமையைப் பற்றிப் பேசுவது இனவாதம் என்று தூபம் போடும் திராவிட ஊடகங்கள் தமிழனை இழிவாகப் பேசுபவர்களைக் கண்டும் காணாமல் போவதின் மர்மம் என்ன… பெயருக்குத் தமிழ் ஊடகங்கள் ஆனால் திட்டமிடுவது, ஊதியம் பெறுவது திராவிடர்களிடமா ?
பாரிசாலனுக்கும் சீனுராமசாமிக்கும் யாரும் இல்லையா என்ன… தமிழர்கள் பொறுமையாகப் போகப் போகத் திராவிட சக்திகளின் ஆணவம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது, கடந்த சில மாதங்களாகச் சமூக ஊடகங்களில் வந்து கொண்டிருக்கும் தமிழர் விரோத காணொளிகளே இதற்குச் சாட்சியாகும். முக்கியக் கட்சிகளில் இருக்கும் பிரமுகர்களும் , மந்திரிகளும் சாதிக் கூட்டங்களில் கலந்து கொண்டு கூச்சனெச்சம் எதுவுமின்றிச் சாதியை ஒழிக்கிறேன் என்று கூறுவதும் தமிழர் விரோத கருத்துக்களைத் தங்கள் சாதிக்கு வலிமை சேர்க்கும் விதமாகப் பேசுவதும் வாடிக்கையாகிவிட்டது.

நடிகர் ராதாரவி, நடிகை ராதிகா, குசுபு மற்றும் சமீபத்தில் விஜய்சேதுபதி என்று தமிழன் பணத்தில் கொழுத்து மூச்சு வீட்டுக் கொண்டிருக்கும் அனைவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமிழர் விரோத செயல்களைக் கூச்சமன்றிச் செய்து கொண்டிருப்பதை இனியும் தமிழர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது சகிப்புத்தன்மை என்கின்ற பெயரில் அடிமைத்தனம் நம்மில் அதிகமாகி கொண்டிருப்பதை நாம் உணரவேண்டும்.

அரசியல் அதிகார கட்டமைப்புகளில் தமிழர்கள் சிறுபான்மையினராகத் திட்டமிட்டே கட்டமைக்கப்பட்டிருக்கின்றனர். தமிழர்களின் குரல் எல்லாத் தளங்களிலும் அமுக்கப்பட்டே வந்துகொண்டிருக்கிறது. தமிழ் மொழி வேண்டும் தமிழர் வாழ்வியல் வேண்டும் ஆனால் தமிழர் மட்டும் வேண்டாம் என்கின்ற புதிய வகைத் தீண்டாமையைத் தமிழர்கள் இனியும் பொறுமை காத்து நகர்ந்தால் நம் தலைமுறையும் மன்னிக்காத தவறுக்கு நாம் ஆளாகிவிடுவோம்.

பாரிசாலனாய் இருந்தாலும் சரி சீனுராமசாமியாய் இருந்தாலும் சரி தமிழர்களைக் குறிவைத்துப் பயத்தை உருவாக்கலாம் என்று யார் தப்பு கணக்குப் போட்டாலும் அனைத்தையும் தூளாகும் பலம் தமிழர்களிடம் உண்டு.

மீண்டும் சந்திப்போம்…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!