மாமன்னன் திரைப்படத்தில் பிரச்சார நெடி சற்று தூக்கலாய் இருந்தது. நமக்கு என்ன ஒரு கேள்வி என்றால், ஒரு சாதாரணத் திரைப்படதில் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராகக் காட்டாமல் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்ததே போதும் என்று காட்ட முனைவது வியப்பாக இருக்கிறது.
ஒடுக்கப்பட்டவன் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும். பதவிக்காக ஒருவனுக்கு வரும் மரியாதையும் மனிதநேயத்தோடு வரவேண்டிய மரியாதையும் ஒன்றல்ல.
திராவிடம் தொடர்ந்து விரித்துக் கொண்டிருக்கும் வலையில் ஒடுக்கப்பட்ட சமூகம் சிக்கி இருப்பதற்கு இந்தத் திரைப்படத்தின் முடிவு நல்ல உதாரணம்!