ஈழப்போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்தும் ஓர் இறந்த மனிதனை மன்னிக்கும் மனம் மட்டும் தமிழர்களுக்கு வரவில்லை என்றால் அறத்தோடு வாழ்ந்த தமிழர்களுக்கு இழுக்கு அல்லவா என்று சாத்தான்கள் வேதம் ஒதுகின்றன.
ஒரு தனி மனிதனுக்குத் துரோகம் இழைத்தலே அவனது சந்ததியர்கள் அதை எளிதில் மறப்பதில்லை அது நீறுபூத்த நெருப்பாக அடுத்தடுத்த சந்தையினருக்குக் கடத்தப்படுகிறது, ஓர் இனத்திற்கு மிக எளிதாகத் துரோக அரசியல் செய்துவிட்டு செத்து மடிந்துவிட்டால், இறந்தவர் புனிதர் என்று கடந்து செல்ல முடியுமா என்ன!
என்ன தான் திராவிடமும், மிதவாத இந்துத்துவக் காங்கிரசும் முரட்டு முட்டுக் கொடுத்தாலும் கருணாதியின் இறந்தநாளும் பிறந்தநாளும் தமிழர் வரலாற்றில் ஒரு கறை என்பதை மறுக்கவோ ஒதுக்கவோ இயலாது.
போர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்ற செயலலிதாவிடம் இருந்த கொடூர நேர்மை கூட, கயவன் கருணாதியிடம் இல்லை என்பது உண்மையான உண்மை. போர் நின்றுவிட்டது, நின்றாலும் தூவானம் விடவில்லை என்ற கருணாநிதியின் மதிகெட்ட சாணக்கியத்தனம் துரோகத்தின் உச்சம்!
தமிழர் அறத்தை வைத்தெல்லாம் கருணாநிதி தப்பித்துக் கொள்ளமுடியாது. தமிழா! உன் அறம் வெல்ல ஏமாளியாகாதே!
#சாத்தான்_செத்தொழிந்தநாள்