0

நீட் – கல்விக்கு பணத்தை நீட்டு!

மனிதன் உயிர் வாழ இயற்கை கொடுத்த கொடைகளையே, சந்தைப்படுத்தி விற்பனை பொருள்களாய், மாற்றிவிட்ட தரகு முதலாளித்துவ நடைமுறை உலகில், கல்வி மற்றும் மருத்துவம் சமூகத்தில் மிகப் பெரிய ஏற்ற தாழ்வுகளை உருவாக்கி இருக்கிறது.

தங்கை அனிதா தன் உயிரை மாய்த்த தருணத்திலேயே மிக எளிதாகத் தெரிந்துவிட்டது இனி மருத்துவம் என்பது தமிழ்நாட்டு ஏழைகளின் எட்டாக் கனி என்று, ஏழைகள் ஏழையாய் இருக்கவும் பணம் படைத்தவர்கள் அதிகப் பணம் சேர்க்கவும் மிகத் தெளிவாக அரசாங்க கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

மேற்கத்திய நடைமுறைகளில் இருக்கும் நல்ல செயல்பாட்டுத் திட்டங்களை இந்திய அரசாங்கம் கண்டு கொள்வது இல்லை ஆனால் நடுத்தர அமெரிக்கர்களைச் சுரண்டும் முதலித்துவச் செயல்பாடுகளைத் தமிழர்களைச் சுரண்ட மிகச் சிறப்பாக அரசாங்கங்கள் செயல்படுத்துகின்றன.

கல்வியும், மருத்துவமும் சேவை என்பதிலிருந்து விலகி பணம் காய்க்கும் மரமாக மாற்றப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அனிதா, ஜெகதீஸ்வரன் என்று ஏழைத் தமிழர்களின் இறப்பு இனி தொடர்கதை தான். இந்துத்துவ இந்திய அரசும், தமிழர்களை ஏமாற்றும் திராவிட அரசும் முதலை கண்ணீர் வடிக்கும் முதலைகள்.

மாநிலங்களின் இறையாண்மை மொழியும், கல்வியும், மருத்துவமும் அதில் மூக்கை நுழைக்கும் எந்த அதிகாரமும் அதிக நாள் தாக்குபிடிக்காது.

அடுத்த நீட் மரணத்திற்குக் காத்திருங்கள், மனிதநேயமற்ற மக்களாட்சி அரசாங்கங்களே!

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!