0

தடை

ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு
கடற்கரை மணல்
ஒரு தடை தான்!
கிழித்துப் பாயும் செவ்வொளிக்கு
மேகமூட்டம்
ஒரு தடை தான்!
சுழன்று வரும் காற்றிற்கு
குளிர்ந்த நிலம்
ஒரு தடை தான்!
கட்டற்று மடைமாற்றம்
நுண்ணியதாய்
அரங்கேற
இமை மூடி
கடந்து செல்ல
இனி
இங்கே வழியில்லை!
தடை தடை என்று
அடுத்தது உரைத்தாலும்
ஊர்க் கூடியே
எனைச்
சபித்தாலும்
என்
வினையை
தமிழன்னை
அவள்
அறிவாள்
வேறேதும்,
வேறொன்றும்,
எம்
பொருட்டில்லை…
வலியில்
பிறந்த உணர்வு
இது
வம்பாய்
வம்பிழுத்தால்
தெம்பாய்
துவம்சம்
செய்வோம்
தமிழ் கொண்டு
அரசியல் செய்தால்
என்றுமே
நாங்கள்
ஒரு தடை தான்!!!
-தமிழன் சங்கர்(4/26/2020)

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!