0

அண்ணாமலை IPSசும் ரவுடிகள் கூட்டமும்!

காவல்துறையின் கண்காணிப்புப் பட்டியலில் இருக்கும், தமிழ்நாட்டின் பல பிரபலமான ரவுடிகளைத் தமிழ்நாடு முழுக்க இந்துத்துவா பாரதீய சனதா கட்சி தேடி பிடித்துச் சேர்த்து வருவதாகப் பல செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. நமக்கு இருக்கும் கேள்வி எல்லாம் இந்துத்துவா சக்திகள் புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை IPSயும் சமூக விரோத சக்திகளும் எப்படி ஒரே நேரத்தில் இப்படிக் கட்சிக்குள் இணைகின்றனர். பல வருடங்களாகப் பல வகைகளில் பாரதீய சனதா கட்சி தமிழ்நாட்டில் நுழைய முயற்சி செய்கிறது அப்படி நடக்கும் போது செய்யும் விடயங்கள் பல தடவை நகைச்சுவை காட்சிகளுக்குப் பஞ்சம் இல்லாத வண்ணமும் மீம் கிரியேட்டர்களுக்கு அல்வாவாகவும் அமைத்திருக்கிறது. குறிப்பாக இவர்கள் ஒரு கோடி உறுப்பினர்களை மிசுட் கால் மூலம் சேர்த்ததாக நடந்த கூத்தை சொல்லலாம்.

இந்த இந்துத்துவவாதிகள் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி சந்தடி சாக்கில் வேறு விடயங்களை முடித்துக் கொள்வதில் கில்லாடிகள், இவர்கள் கட்சிக்குள் ரவுடிகளை எந்த அடிப்படையில் இணைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்று நாம் அலச வேண்டும். அஃது எப்படி ஒரே சமயத்தில் காவல்துறையின் உயர்ந்த பதிவியில் இருந்தவரையும் சமூக விரோதிகளையும் கட்சிக்குள் கொண்டு வந்து அதைப் பத்திரிகைகளில் முக்கியச் செய்தியாகக் கொண்டு வருகிறார்கள் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்குப் பின் இருக்கும் அரசியலை நாம் முழுதாக உணரவேண்டும்.

திமுக, அதிமுகக் கட்சிகளின் வன்முறை வெறியாட்டங்களை நாம் பார்த்திருக்கிறோம் அந்த வகையில் இந்துத்துவா கட்சி ஏதேனும் திட்டமிடுகிறதா எண்டு பொறுத்திருந்து பார்க்கவேண்டும். அண்ணாமலை IPSயை பற்றிச் சுரேசு சேவியர் ஒரு காணொளியில் கிழித்தெடுக்கிறார். அண்ணாமலை IPS எந்தப் பயிற்சி நிறுவனத்திலேயும் சென்று படிக்கவில்லை என்று காட்டமாகத் தெரிவிக்கிறார். அவர் படித்தது சங்கல்ப் IAS என்கின்ற சங்கீ பயிற்சி நிறுவனத்தில் படித்திருக்கிறாராம், 2010 வருடத்தில் நடந்த தேர்வில் அவரது தேர்வாளர் எண் 050809 என்றும் எழுத்துத் தேர்வில் 2000 த்திற்கு இவர் எடுத்து 927 மதிப்பெண் தானம் 50% சதவிகிதம் கூட எடுக்கவில்லை, அதை முடித்து நேர்முகத் தேர்வில் 300 மதிப்பெண்ணுக்கு 240 மதிப்பெண் எடுத்துள்ளார் எழுத்துத் தேர்வில் 50% கூட எடுக்க முடியாத அண்ணாமலை நேர்முகத் தேர்வில் 240 மதிப்பெண் எடுத்தது எப்படி என்று பல சந்தேகங்களை எழுப்புகிறார். எழுத்துத் தேர்வில் தோல்வியடைந்த அண்ணாமலை நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து மொத்தம் 1167 மதிப்பெண் மூலம் 284 நபராக IPS இல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் எப்படி IPS தேர்வானார் என்று அவர் மிகப் பலமாகக் கேள்விகளை வைக்கிறார்.

இவர் படித்த சங்கல்ப் IAS நிறுவனத்தில் அந்தச் சமயத்தில் இருந்தவர் இன்றைய பாரதீய சனதாகட்சியில் ஊடக துறை பொறுப்பாளராக இருப்பவர் தான். இந்தச் சங்கல்ப் IAS பயிற்சி நிறுவனத்தில் படித்த 90 % சதவிகிதம் பேர் IAS,IPS ஆகி இருக்கின்றனர். இதில் இருந்து படித்து இன்று அரசாங்க சேவைகளில் இருப்பவர்கள் எப்படிச் செயற்படுவார்கள் என்பது உங்களுக்கே இப்போது புரிந்திருக்கும். ஒரு பக்கம் அரசாங்கத்தில் ஊடுருவல், ஒரு பக்கம் சமூக விரோதிகளைச் சேர்ப்பதில் அதீத ஆர்வம். ரசினிக்குத் திட்டம் போட்டு ரசினி நடித்த அண்ணாமலை படத்தின் பெயராவது பயன்படும் என்று அண்ணாமலை IPSயை கொண்டு வந்திருக்கின்றனர். தமிழர்கள் நடப்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். நம்மவர்களை அடையாளம் கண்டு ஆதரியுங்கள்.

மீண்டும் சந்திப்போம்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!