0

கொரோனவை விடக் கொடியவர்கள் மாரிதாசும் திராவிட ஊடகங்களும்!

மக்கள் நாள்தோறும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போது அதற்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் தமிழர்களுக்குள் உளவியல் சிக்கலை ஏற்படுத்தும் தேவையற்ற சித்தாந்த விளையாட்டுகளை என்னவென்று சொல்வது, மாரிதாசு தீவிர இந்துத்துவாதி என்பது நமக்கு நன்கு தெரிந்த விடயம், முக்கால்வாசி தமிழகப் பொது ஊடகங்கள் திராவிடத்தின் பிடியில் இருக்கிறது, இவர்கள் இரண்டு பேரும் போடும் சண்டைகளைத் தமிழர்கள் வாயில் விரலை வைத்துக் கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதே அவர்களது எண்ணம், சொல்லிவைத்தது போல் தமிழர்கள் நாம் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறோம்

இந்துத்துவாதிகள் எப்படியாவது நேரடி பாரதீய சனதா ஆட்சியைத் தமிழகத்தில் கொண்டு வந்து விட வேண்டும் என்று திராவிடனுக்குப் போக்கு காட்டிக் கொண்டு கடுமையான பொய்களையும் புரட்டுகளையும் தங்களை இந்துக்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் தமிழர்களிடம் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர் அது போதவில்லை என்று திராவிடம் பெருத்த தமிழ்நாட்டு அரசாங்கத்தில் தமது ஊடுருவல்களை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர், எடுத்துக்காட்டாக இஸ்கான் (ISKON) என்கின்ற RSS இந்து அமைப்பு தமிழ்நாட்டு மாணவர்களின் சத்துணவு திட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பதையும், சமீபத்தில் தந்தை மகன் என்று ஒரே குடும்பத்தை சேர்ந்த ஜெயராசு, பீனிக்சு இருவரை படுகொலை செய்த தமிழ்நாட்டு காவல்துறையுடன் சேர்ந்து பயணித்த Friends of Police மற்றும் சேவா பாரதி அமைப்பையும் இங்குக் குறிப்பிடலாம்.

இப்பொழுது இந்துத்துவாதிகள் மத்தியில் ஆட்சியில் இருப்பதால் வலுவான திராவிட அமைப்புகளை நெருக்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழனின் பெருந்துயரம் என்ன வென்றால் தமிழன் இவர்கள் இருவரும் அடித்துக் கொண்டிருக்கும் போது வேடிக்கை பார்க்கும் நிலையில் தான் இருக்கிறான். இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் தமிழனின் தோல்வி மட்டும் உறுதி. திராவிடனை காப்பாற்றுகிறேன் அவன் என் பங்காளி என்று இந்துத்துவாதிகளை எதிர்ப்பதற்குத் திராவிடனுடன் கைகோர்ப்பதோ, இல்லை திராவிடன் தான் தகர்க்க முடியாத அளவிற்குப் பலமாக இருக்கிறான் இன்று பாசிச இந்துத்துவா பக்கம் சேர்வதோ எந்தப் பலனையும் தமிழர்களுக்கு அளிக்காது.

தமிழர்கள் நாம் தற்பொழுது என்ன செய்யவேண்டும், மிக எளிது துரோகிகளை இனங்காணுங்கள்… அவ்வளவு தான்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!