ஒரு விழியும் போட வேண்டும், எதைப் பற்றி யார் அதிகம் பேசுகிறார்கள் என்று பார்த்தால், எங்கு எதைப் பற்றிப் படித்தாலும், கடைசியில் தமிழருக்கு எஞ்சி இருக்கும் தமிழ்நாட்டில் தான் வந்து முடிகிறது.
பல விழியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது மதன் கௌரி என்பவரின் சமீபத்திய விழியத்தைப் பார்க்க நேர்ந்தது, வளையொளியில் பல்லாயிரம் நபர்கள் தொடரும் நபர், சரியான புரிதல் இன்றி மேலோட்டமாகக் கருணாநிதி பற்றியும் யார் தமிழர் என்று அவரே ஒரு கேள்வியைப் பதிவு செய்து அவரே முட்டாள்தனமாக ஒரு கருத்தை பதிய செய்ததும், என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவர் யார் தமிழர் என்கின்ற விளக்கத்தில் பல்லாயிரம் ஆண்டுக்கு முன் மனிதர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தனர் என்கின்ற ஐரோப்பியர்களின் சிந்தனையை மையமாகக் கொண்டு பதில் அளித்திருந்தார். தமிழ்நாட்டில் தமிழர்களுக்காக ஒரு வளையொலியை நடத்திக் கொண்டு திட்டமிட்டு மறைத்த தமிழர் வரலாறு பற்றிய எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளாமல் பல லட்சம் நபர்கள் தொடருவதால் மட்டும் தான் சொல்வது தான் சரி என்கின்ற சிந்தனை போக்குத் தவறு. இவரைப் போல் பலர் இன்று வலையொளிகளில் தமிழர்களைத் தவறான கருத்துக்களால் திசைதிருப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இன்றைய சூழ்நிலையில் பலர் புதிது புதிதாக வலையொளியில் வர ஆரம்பித்திருக்கின்றனர் தமிழர்கள் அவர்கள் சொல்லும் கருத்தை அப்படியே நம்பாமல் சரியானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், தவறானவற்றை ஒதுக்கி தள்ளுங்கள்.
சமூக ஊடகங்கள் கட்டற்ற சுதந்திரத்தை கொடுத்திருக்கிறது அதைப் பொது ஊடகம் போன்று கருத்துத் திணிப்பாளர்களிடம் கொடுத்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளாமல் பின் நாளில் வருந்தாதீர்கள் தமிழர்களே.
எங்கிருந்தோ வந்த ஒரு பெண் EIA2020 பற்றிப் பேச அது முகநூல்,பகிரி,கீச்சு என்று சமூக ஊடகம் முழுக்க ஓர் இடம் விடாமல் பகிரப்பட்டது. நமக்கிருக்கும் அச்சம் எல்லாம் சல்லிக்கட்டு சூலியை போல் EIA 2020 எதிர்ப்புச் சமூகப் போராளிகளின் கதாநாயகியே இவர் தான் என்று மக்கள் தலையில் இவரைக் கட்டி பின்னாளில் சூலியை அசிங்கப்படுத்திச் சல்லிக்கட்டை விமர்சித்தது போல் ஒரு நிலை வந்து விடக் கூடாது என்பதே.
சமூகப் பிரச்சனைகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் ஓரிரு பிரச்சனையை மட்டும் எடுத்து பேச மாட்டார்கள், அவர்கள் எல்லாச் சமூகப் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பார்கள். திடீரென்று யார் பிரபலப்படுத்தபட்டாலும் தமிழர்களே நம்பி விடாதீர்கள், அதன் பின்னல் பல அரசியல் இருக்கும். பெங்களூரு அண்ணாமலை பற்றி அடுத்தடுத்து பார்க்கலாம் தமிழர்களே!