0

நீங்க தடுப்பூசி போட்டுடீங்களா Mr. செம்மறி ஆடு ?

டென்னிஸ் உலகின் தரவரிசை பட்டியலில் முதலில் இருக்கும் செர்பியா நாட்டு டென்னிஸ் வீரர் ஜோகோவிக் தடுப்பூசி போடவில்லை என்கின்ற காரணத்திற்காக ஆத்திரேலியா அரசால் அடுத்த மூன்றாண்டுகளுக்கு அந்த நாட்டில் நடக்கும் எந்த டென்னிஸ் ஆட்டத்திலும் கலந்து கொள்ள முடியாதவாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நாம் இன்று இருக்கும் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது…. இதுவரை எளிதில் உணரமுடியாதவாறு நடந்து வந்த பெரிய நகர்வுகள் எல்லாம் இன்று அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படும் நிலை வரைக்கும் தெளிவாக உணரும் வகையில் வெளிப்படையாக நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மக்களாட்சி என்கின்ற பெயரில் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு விடயத்திற்கும் இரு பக்கம் இருக்கும் ஆனால் இந்தப் பெருந்தொற்றைப் பொறுத்தவரை அரசாங்கங்கள் சொல்வதே சரியென்பது போல் ஆட்டு மந்தைகளாய் மக்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பெருந்தொற்றைப் பற்றி உலகளாவிய எந்த விவாதமும் வெளிப்படையாய் நடைபெறவில்லை… இது மிகப் பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது.

சமூக ஊடகங்களில் பெருந்தொற்றின் பேரை போட்டாலே அரசாங்கங்களின் பயமுறுத்தல்கள் தான் அதிகம் வருகின்றன.

டென்னிஸ் வீரர் ஜோகோவிக் இது வரை தடுப்பூசி போடவில்லை… அது பெருங்குற்றமா என்ன.. எளிதில் இந்தப் பிரச்சனையை அணுகாமல் இதைப் பரபரப்பாக்கியதின் நோக்கம் என்ன ?

மதரீதியாகவும், உடல்நலன் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் தடுப்புஊசி வேண்டாம் என்பவர்களின் குரல் ஏன் நசுக்கப்படுகிறது என்பதை ஆராய ஆரம்பித்தால் பல உண்மைகள் புரிய ஆரம்பிக்கும்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!