0

தமிழா! துரோகத்தில் பங்கெடுக்காதே!!!

Ulaga Tamil Sangam - Wikipedia

ஒற்றுமை, சமத்துவம்,சகிப்புத் தன்மை போன்ற நல்ல குணாதிசியங்கள் தமிழர்களுக்கு வேண்டும், நன்றாகக் குறித்துக் கொள்ளுங்கள் தமிழர்களுக்கு மட்டும் இவை வேண்டும்.

நான் ஒன்று கேட்கிறேன் கன்னடர்களுக்கும் , மலையாளிகளுக்கும், தெலுங்கர்களுக்கும் இன்னப் பிற இந்தியர்களுக்கும் இந்தக் குணாதிசியங்கள் தேவை இல்லையா ?

முதலில் தமிழ்நாடு என்று கோடுகளால் வரையறுக்கப்பட்ட எங்கள் தேசத்தை முழுதாக நாங்கள் ஆளவில்லை, தெலுங்கர்கள் ஆட்சியான விசய நகர அரசில் இருந்து இன்று ஆரிய அடிவருடிகளாய் ஆட்சி செய்யும் எடப்பாடி வரை தமிழுணர்வுப் பொங்கிய அசல் தமிழனால் தமிழர்கள் நாங்கள் ஆளப்படவில்லை.

தமிழனாய் நான் வெட்கப்படுகிறேன், எங்கள் சகோதரர்களாய் உங்களைப் பார்த்தோம் ஆனால் எங்களை எப்படியெல்லாம் ஏமாற்றி இருக்கிறார்கள்… உங்களுக்குத் தேவை எங்கள் இயற்கை வளங்கள் செழித்தோங்கிய எங்கள் வயல் வரப்புகளும், தென்றல் வீசிச் செல்லும் மலைக்காடுகளும், துள்ளிக் குதித்து வரும் எங்கள் ஆறுகளும், உங்களுக்குச் சேவைச் செய்ய அடிமைத் தமிழர்களும்.

இன்று நிலைமை எப்படி இருக்கிறது என்றால் தமிழர்கள் தங்களுக்கான இடங்களில் கூட அகதிகளாய் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுளோம். தமிழர்கள் எங்கள் உரிமையைக் கேட்கும் பொழுது பிரிவினைவாதிகளாய், தீவிரவாதிகளாய் உங்கள் இருப்புகளைத் தக்க வைக்கச் சகத் தமிழர்களிடம் காட்டப்படுகிறோம்.

உங்கள் நுண்ணிய அரசியல் புரியாமல் சகத் தமிழர்கள் எங்களை ஒதுக்கி வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம், நீங்கள் நினைக்கிறீர்களா இந்த விளையாட்டு இனியும் செல்லுபடியாகும் என்று.

Bengaluru : A vehicle from Tamil Nadu in flames after it was torched by pro-Kannada activists during a protest over Cauvery water row, in Bengaluru on Monday. PTI Photo (PTI9_12_2016_000261B)

காவிரி பிரச்சனைக்குக் கர்நாடகத்தில் எங்களை அடித்தார்கள், ஆந்திரத்தின் செம்மரக்காட்டில் எங்களைப் படுகொலைச் செய்தார்கள், கேரளாத்தில் நாய்களை விடக் கேவலமாக எங்களை நடத்துகிறார்கள், மராட்டியத்தில் விரட்டியடித்தார்கள், இந்தியாவின் துணையுடன் தமிழீழத்தில் எங்களை இனப்படுகொலை செய்தார்கள்… இவ்வளவையும் தாண்டி நாங்கள் புன்னகைச் சிந்தி உங்கள் அன்னைவரையும் வாரி அணைத்துச் செல்லவேண்டும் என்று நீங்கள் நினைப்பது என்ன ஒரு மனநிலை.

எங்களுக்கு ஆலோசனையோ அறிவுரையோ சொல்லும் தகுதி இங்கு யாருக்கும் இல்லை. தமிழ் அமைப்புகளுக்குத் தமிழர்களே தலைவர்களாய் இருக்க வேண்டும்… வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழினமே உன் அலட்சியத்தால், சோம்பேறித்தனத்தால் நம்மினம் அழிந்து கொண்டிருக்கிறது… இனஉணர்வுக் கொள்… துரோகத்தில் பங்கெடுக்காதே!!!தமிழ்,தமிழர் அமைப்புகள் திராவிட,ஆரிய நபர்களால் நிரப்பப்பட்டு தமிழர்கள் சிறுபான்மையினராக இருக்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும்!!!

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!